சர்வதேச மட்டத்திலான கொள்கலன் துறைமுகங்களில் கூடுதலான வளர்ச்சியை பதிவு செய்துள்ள துறைமுகமாக கொழும்பு துறைமுகம் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. இந்தப்பட்டியலில் சிங்கப்பூர் துறைமுகம் 16.5 சதவீத வளர்ச்சியுடன் முதலாவது இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் வளர்ச்சி 12 தசம் ஆறு சதவீதமாகும். Alphaliner global port நிறுவனத்தின் தரப்படுத்தலில் இலங்கை இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை சிறப்பம்சமாகும்.

கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டாம் இடம்
படிக்க 0 நிமிடங்கள்