fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திப்பு

ITN News Editor
By ITN News Editor மே 31, 2018 08:50

அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திப்பு

அமெரிக்க காங்கிரஸ் சபையின் உறுப்பினர்கள் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு தயார் என ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படும் விநியோக மார்க்கங்களை தடுப்பதற்கு அமெரிக்க பாதுகாப்பு பிரிவினர் உதவி இன்றியமையாததென ஜனாதிபதி கூறியபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாஸஸ்த்தலத்தில் அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இக்குழுவின் தலைவரான மெக்லன் தோன் பெரி உள்ளிட்ட பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். இலங்கை உலகின் ஏனைய நாடுகளுடன் ஒத்துழைப்புடனும் நட்புறவுடனும் செயற்படுவதாக ஜனாதிபதி இச்சந்திப்பின்போது கூறினார். இருநாடுகளுக்கிடையில் இராணுவ பயிற்சி திட்டங்களை மேலும் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் தொழிநுட்ப அறிவை அதிகளவில் பெற்றுக்கொள்வதன் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி இச்சந்திப்பின்போது சுட்டிக்காட்டினார். நவீன உலகில் தொழிநுட்பமின்றி பாதுகாப்பு இல்லையெனவும் ஜனாதிபதி இச்சந்திப்பின் போது தெரிவித்தார். இலங்கையை பலமானதும் வளமானதுமான நாடாக கட்டியெழுப்புவதற்கான உதவியை வழங்குவதே தமது கொள்கை என அமெரிக்க பிரதிநிதிகள் இச்சந்திப்பின் போது தெரிவித்துள்ளனர். பிராந்திய பாதுகாப்பு மற்றும் உலக சமாதானம் போன்றவற்றிற்காக இலங்கையின் உள்ளக பாதுகாப்பு மிகவும் இன்றியமையாதென இப்பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை மேலும் கட்டியெழுப்புதவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதே இவ்விஜயதத்pன் நோக்கமென அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் ஜனாதிபதியடம் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor மே 31, 2018 08:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo