அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் : ஜனாதிபதி
Related Articles
இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சுகாதாரத்துறை உள்ளிட்ட நாட்டின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் தேவையான சகல விதமான வசதிகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி என்ற ரீதியில் தான் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகள் கீர்த்திமிக்க சேவையாளர்கள் என்ற வகையில் நாட்டின் சுகாதாரத் துறைக்காகவும் குறிப்பாக கிராமிய மக்களுக்காக ஆற்றும் சேவைகளை ஜனாதிபதி அவர்கள் இதன்போது நினைவுகூர்ந்தார்.
இதன்போது ஜனாதிபதி தான் சுகாதார அமைச்சராக தான் பணியாற்றியபோது மருத்துவ சங்கத்துக்கு பல வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்ததுடன், தற்போதைய சுகாதார அமைச்சரால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களையும் ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.
பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மஹிந்த லியனகே அவர்களால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.