தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் ஒன்பது புதிய சாதனைகள்
Related Articles
தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் புதிய தேசிய சாதனையொன்றும் கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு சாதனைகள் ஒன்பதும் படைக்கப்பட்டுள்ளன. சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறும் இம்முறை மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் 2600கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர்.
18 வயதுக்குட்பட்ட மகளிர் ஈட்டியெறிதல் போட்டியில் என்.தர்ஷிகா தேசிய சாதனையை படைத்துள்ளனர். 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் இரண்டு போட்டி சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 16 வயதுக்குட்பட்ட மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில் கனிஷ்ட சாதனை ஏற்படுத்தப்பட்டது. ஒவினி சந்திரசேக்கர இந்த சாதனையை ஏற்படுத்தினார். இதே வயது பிரிவில் நீளம் பாய்தலில் இருஷ ஹேஷான் புதிய கனிஷ்ட சாதனையை ஏற்படுத்தினார்.
23 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் யு.ஜே பெரேரா புதிய கனிஷ்ட சாதனையொன்றை ஏற்படுத்தினார். சந்மாலி குமாரசிங்க 800 மீட்டர் ஓட்டத்தில் கனிஷ்ட போட்டி சாதனையை ஏற்படுத்தினார். இம்முறை விளையாட்டு விழாவில் பங்குபற்றியுள்ள வீர வீராங்கனைகளின் பாதணிகளை தேசிய மெய்வல்லுனர் சங்கம் சோதனையிடுகின்றது. அவர்கள் அணியும் பாதணிகளில் ஆணியின் உயரம் உரிய அளவில் காணப்படுகின்றதா என்பது தொடர்பிலேயே அவர்கள் சோதனைகளை மேற்கொள்கின்றனர். 6 மற்றும் 9 மில்லி மீட்டருக்கு இடையிலான ஆணி இல்லாத பாதணிகளை அணிய வீரர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களை உபாதைகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டும் செயற்கை ஓடு பாதையை பாதுகாக்கும் நோக்கிலேயே இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.