fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நிவாரணத்தை பெறுவதற்கு பதிலாக அதில் தாமத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படவேண்டாம் : சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்

ITN News Editor
By ITN News Editor June 25, 2021 18:13

ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் நேற்றைய தினம் 96 பேர் விடுவிக்கப்பட்டனர். குற்றவியல் சட்டத்தின் 34 வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமையவே பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ச்சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட எவரும் இதற்கு முன்னர் கூரைகளில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் இல்லையெனவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதைப் போன்று தாமும் விடுவிக்கப்படவேண்டுமெனக் கோரி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மஹர சிறைச்சாலையில் 74 பேரும் வெலிக்கடை சிறைச்சாலையில் 100 பேரும் உண்ணாவிரதபோராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சின் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர்களது மரண தண்டனையை ஆயுள்தண்டனையாக தளர்த்த கலந்துரையாடல்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்திலேயே சிறைக்கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தண்டனையை தளர்த்தும் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படலாமென சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். விரைவாக கிடைக்கவுள்ள நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக அதில் தாமத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படவேண்டாமென அவர் கோரிக்கை விடுத்தார்.

ITN News Editor
By ITN News Editor June 25, 2021 18:13

BUSINESS NEWS- VIEW ALL

SPORTS NEWS- VIEW ALL

ENTERTAINMENT- VIEW ALL