fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனுடன் தொடர்புடைய தயாரிப்புகளுக்கு நாளை முதல் தடை

ITN News Editor
By ITN News Editor March 30, 2021 11:55

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனுடன் தொடர்புடைய ஆறு தயாரிப்புக்கள் பயன்பாடு மற்றும் தயாரிப்புகளுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுகின்றது.  ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி எரியப்படுகின்ற பொலித்தீன்கள் மற்றும் பிளாஸ்டிக் ஆகியன இத்தடைக்குள்ளாகின்றன. சிறிய போத்தலும் நாளை முதல் இலங்கையில் பயன்பாட்டுக்கும் உற்பத்திக்கும் தடைக்குள்ளாகின்றன. 20 மைக்ரோனுக்கும் குறைந்த லன்ச் ஷீட்ஸ், உணவு மற்றும் ஒளடதம் இல்லாத செஷே பக்கட்டுக்கள் வைத்திய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படாத கொட்ன் பட் மற்றும் காற்று நிரப்பக்கூடிய பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் ஆகியனவும் இத்தடையில் உள்ளடங்குவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் தற்போது வர்த்தக நிலையங்களில் கையிருப்பில் உள்ள தொகை நிறைவடையும் வரை அவற்றை விற்பனை செய்ய முடியும். அவ்வாறான வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்படாத போதும் அவை இந்நாட்டில் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டவையா என்பது குறித்து இந்நிறுவனங்கள் அவ்வப்போது சோதனைக்குட்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர நாளாந்தம் சேர்க்கப்படும் நகர்ப்புற கழிவுகளில் நூற்றுக்கு 5.9 வீதமானவை பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்கள் என தெரிவித்தார். நாட்டிற்குள் ஒரு நாளில் 400 டொன் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. மாதமொன்றிற்கு நாட்டில் 1250 டொன் பெற் போத்தல் பயன்படுத்தப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 250 டொன் மாத்திரமே மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இலங்கையின் மொத்த பிளாஸ்டிக் மீள் சுறழ்சி நூற்றுக்கு 15 முதல் 20 வீதத்திற்குள் காணப்படுகிறது. நாளொன்றுக்கு 232 டொன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்;கப்படுகின்றன. பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் 30 இலட்சம் டொன்களும் அதற்கு தேவையான உதிரிப்பாகங்கள் பாரியளவிலும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதன் காரணமாக நாளை முதல் பிளாஸ்டிக்குடன் தொடர்புடைய 6 தயாரிப்புக்களை இலங்கையில் பயன்படுத்துவதற்கும் அதனை தயாரிப்பதற்கும் தடை விதிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor March 30, 2021 11:55

BUSINESS NEWS- VIEW ALL

SPORTS NEWS- VIEW ALL

ENTERTAINMENT- VIEW ALL