பரீட்சை நிலையத்திற்கு கைப்பேசி எடுத்துச்சென்ற மாணவனும் உதவிபுரிந்த ஆசிரியையும் கைது

ITN News Editor
By ITN News Editor දෙසැම්බර් 7, 2018 15:12

பரீட்சை நிலையத்திற்கு கைப்பேசி எடுத்துச்சென்ற மாணவனும் உதவிபுரிந்த ஆசிரியையும் கைது

பரீட்சை மத்திய நிலையத்திற்கு கையடக்க தொலைபேசியை எடுத்துச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன் மற்றும் பரீட்சை மோசடியில் ஈடுபடுவதற்கு அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியை ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்றையதினம் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சந்தேகநபரான மாணவன் நான்காவது முறையாக சாதாரணதர பரீட்சையில் தோற்றியதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சந்தேகநபரான ஆசிரியை பரீட்சை மத்திய நிலையத்தில் மேற்பார்வை பணிகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கையடக்க தொலைபேசியில் குறுந்தகவலினூடாக மாணவருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor දෙසැම්බර් 7, 2018 15:12

Default