SHARE

டெஸ்ட் தொடர் இந்தியா வசமாகியுள்ள நிலையில் இந்திய – இலங்கை அணிகளுக்கிடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று பல்லேகல மைதானத்தில் தொடங்கியது.நாணய சுழற்சியில் வென்ற இந்தியா தனது முதலாவது இன்னிங்சில் 487 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.ஷீகர் தவான் 119 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்டியா 108 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.இவர் தன்னுடைய டெஸ்ட் ஆட்டத்தில் கன்னி சதத்தை வேகமாக பெற்றுக்கொண்டார்.ரங்கன ஹேரத்தின் சுழலில்லாத இந்த போட்டியில் புதிய இளம் சுழல் லக்சன் சந்தகென் 5 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.இவர் டெஸ்ட் போட்டியொன்றில் 5 விக்கட்டக்களை சாய்த்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.புதுமுக வேகப்பந்து வீச்சாளராக அணிக்குள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விஷ்வ பெர்னாண்டோ தனது கன்னி டெஸ்ட் அரங்கில் 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.தனது முதலாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை வீரர்களால் சிறந்த நிலையை வெளிப்படுத்த முடியவில்லை.இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கட்டுக்களை வேகமாக சரித்தனர்.அணித்தலைவர் சந்திமால் மாத்திரம் 48 ஓட்டங்களை பெற்றார்.இந்திய அணிக்குள் தான் உள்வாங்கப்பட்டால் என் உழைப்புக்கு கிடைத்த வெற்றியென கூறி இந்திய அணியில் இலங்கைக்கெதிராக நடைபெறும் போட்டியில் விளையாட ஆவலோடு காத்திருந்த குல்தீப் யாதவ் அணிக்குள் உள்வாங்கப்பட்டு தனது  கன்னி டெஸ்ட் போட்டியில் 4 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.தனது முதல் இன்னிங்சில் 135 ஓட்டங்களுக்குள் சுருண்ட இலங்கை பொலோ ஓன் முறையில் 2ஆவது இன்னிங்சை தொடர்ந்து இன்றைய ஆட்டம் நிறுத்தப்பட்ட போது 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டை இழந்துள்ளது.இலங்கை இப்போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே ஆறுதல் வெற்றியையாவது பெறலாம்.இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் ஓட்டங்களை அதிகமாக குவித்தால் மாத்திரமே இந்திய அணிக்கு தொல்லை கொடுக்க முடியும்.நாளை போட்டியின் 3ஆம் நாளாகும்.

LEAVE A REPLY