SHARE

இலண்டனில் நடைபெற்று வரும் உலக சம்பியன்ஸ் ஷிப் போட்டியில் தான் கலந்து கொள்ளும் 4×100 மீட்டர் ஓட்டப்போட்டியில் மின்னல் வேக ஓட்டக்காரன் என உலகப்புகழ் பெற்ற யுசைன் போல்ட் எதிர்பராராத விதமாக எற்பட்ட உபாதை காரணமாக கீழே விழுந்தது அனைவரையும் பொறுக்க முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.ரசிகர் எதிர்பார்ப்பை அவரால் தன்னுடைய கடைசி போட்டியில் பூர்த்தி செய்ய முடியவில்லை.இவரது கடைசி தடகள போட்டி என ஏலவே அறிவிக்கப்பட்டிருந்த தருணத்தில் இப்போட்டியில் 4ஆவது வீரராக ஓடிய அவர் வேகமாக ஓட முனைந்த வேளையிலிலேயே உபாதை ஏற்பட்டுள்ளது.தனது ஓடுபாதையிலேயே உபாதைக்குள்ளாகி விழந்த அவருக்கு தொடைப்பகுதியில் எண்பு முறிவு ஏற்பட்டிருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.சாதனைகளை தன் வசம் வைத்திருக்கும் அவருக்கு இறுதித்தருணங்களில் ஏற்பட்ட உபாதைகள் அவரது ரசிகர்களுக்கு இறுதி வரை மறக்க முடியாத வலியாகவே இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

LEAVE A REPLY