SHARE

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டி ஆர்.பிரமேதாச மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே தனது முதலாவது இன்னிங்சில் 356 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.கிரைக் ஏர்வைன் 160 ஓட்டங்களை கூடுதலாக பெற்றார்.ரங்கன ஹேரத் 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.தனது முதலாவது இன்னிங்சில் இலங்கை 346 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.உபுல் தரங்க 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.கரீமர் 5 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.இரு அணிகளதும் பந்துவீச்சும் துடுப்பாட்டமும் முதல் இன்னிங்சில் சிறப்பாக இருந்தது.தனது இரண்டாவது இன்னிங்சில் சிம்பாப்வே சகல விக்கட்டுக்களையும் இழந்து 377 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.ஒரு கட்டத்தில் 59 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்து இலங்கையின் பந்துவீச்சில் தடுமாறத்தொடங்கியது.இலகுவாக வீழ்த்திவிடலாம் என நினைத்திருந்த போதும் மத்திய தர வரிசை வீரர் சிக்கந்தர் ராசா சிறந்த துடுப்பாட்டத்தை வழங்கி விக்கட்டுக்களை விரைவாக சரிவதை தடுத்திருந்தார்.இதனூடாக சிம்பாப்வே அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியது.இலங்கை பந்துவீச்சாளர்களை அவர்கள் எதிர்கொள்வதில் மிக நிதானத்தை கடைப்பிடிக்கத்தொடங்கினர்.

சிக்கந்தர் ராசா 127 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.ரங்கன ஹேரத்தின் சுழல் மிகச்சிறப்பாக அமைந்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.அவர் 6 விக்கட்டுக்களை இரண்டாவது இன்னிங்சில் கைப்பற்றியிருந்தார்.மொத்தமாக இந்த இன்னிங்சில் மாத்திரம் அவர் 11விக்கட்டுக்களை வீழ்த்தி 81 டெஸ்ட் போட்டிகளில் 8 தடவைகள் 10 விக்கட்டுக்களை வீழ்தியவர்  என்ற பெருமையையும் பெற்றார்.சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலே பத்து விக்கட்டுக்களை கூடுதலாக வீழ்த்தியவர்கள் வரிசையில் 4 ஆவது இடத்தை பிடித்துக்கொண்டார் ஹேரத்.388 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இலங்கை அணி இன்றைய நாள் நிறைவுக்கு வரும் போது 3 விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுள்ளது.கிரீமர் 2 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.குஷால் மெண்டில் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களை பெற்றுள்ளார்.நாளை, போட்டியின் 5ஆவது நாளாகும்.இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 218 ஓட்டங்களை பெற வேண்டும்.கையிருப்பில் 7 விக்கட்டுக்களை மாத்திரமே உள்ள நிலையில் சிறந்த இணைப்பாட்டமொன்று நாளைய போட்டியில் அமைந்தால் நிச்சயம் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளது.இதேவேளை இலங்கை அணியே வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ளதாக கிரிக்கட் விமர்சகர் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY