SHARE

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC  Hall of Fame) விருதிற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனை புகழ்பூத்தவர்களின் பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கட் பேரவை கௌரவித்துள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரின் போது இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (ICC  Hall of Fame)  ஐசிசி இன் ஹோல் ஒப் பேம் என அழைக்கப்படும் இவ்விருதுக்கு இலங்கை வீரர் ஒருவர் தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இவ்விருது ஐசிசியின் உயர் கௌரவ விருதாகவும் கிரிக்கட் துறைக்கு ஆற்றிய சேவைக்காக வழங்கப்படுகின்ற உயர் விருதாகவும் கருதப்படுகின்றது.

முரளியுடன் அவுஸ்திரேலியாவின் ஆத்தர் மொரிஸ் கரேன் ரோல்டன், இங்கிலாந்தின் ஜோர்ச் லெஹ்மான் ஆகியோருக்கும் இவ்விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருதுடன் ஹோல் ஒப் பேம் தொப்பியும் பரிசாக வழங்கப்படும். டெஸ்ட் போட்டிகளில் 22 முறை 10 விக்கட்டுக்களையும் 67 முறை 5 விக்கட்டுக்களையும் முத்தையா முரளிதரன் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY