SHARE

T20 அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையை கிரிஸ் கெயில் ஏற்படுத்தியுள்ளார். குஜராத் அணியுடனான ஐபிஎல் போட்டியிலேயே அவர் இச்சாதனையை ஏற்படுத்தினார். நேற்று ராஜ்கோட்டில் குஜராத் பெங்களுர் அணிகள் மோதின.

இதில் முதலில் களமிறங்கிய பெங்களுர் அணியின் தொடக்க வீரர்களான விராட் கொஹ்லி, கிரிஸ் கெயில் ஆகியோர் சிறந்த தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தனர். கிரிஸ்கெயில் 3 ஓட்டங்களை எடுத்த போது, ஒட்டுமொத்த 20-20 கிரிக்கட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். முதல் விக்கட்டுக்காக 122 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில் கிரிஸ் கெயில் 77 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து 60 ஓட்டங்களில் விராட் கொஹ்லி ஆட்டமிழந்தார். இறுதியில் பெங்களுர் அணி 20 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களை குவித்தது.

இதனைதொடர்ந்து 214 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனும் இலக்குடன் கலமிறங்கிய குஜராத்அணியின் வீரர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னா, 23 ஓட்டங்களையும் ஹெரோன் பிஞ் 19 ஓட்’டங்களை பெற்ற நிலையில் கலத்தை விட்டு வெளியேறினார். பிரன்டன் மெக்கலம் 44 பந்துகளை  எதிர்கொண்டு 72 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 23 ஓட்டங்களையும் இஷான் 33 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதன் மூலம் 21 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

LEAVE A REPLY