SHARE

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி தற்பொழுது ராஞ்சியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.நாணய சுழற்சியில் வென்று முதலாவது இன்னிங்சில் ஆடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 451 ஓட்டங்களை பெற்றது.அணித்தலைவர் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 178 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.ஜடேஜா 5 விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தார். தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி  முதலாவது இன்னிங்சை 9 விக்ககட்டுக்களை இழந்து 603 ஓட்டங்களை பெற்ற வேளை நிறுத்திக்கொண்டது.இந்திய அணி சார்பாக புஜாரா 202 ஓட்டங்களை பெற்று சிறப்பான ஒரு துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.தற்பொழுது அவுஸ்திரேலிய தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் நிலையில் சற்று முன்னர் வரை 4 விக்கட்டுக்களை இழந்து 90 ஓட்டங்களை பெற்றுள்ளது.இன்று போட்டியின் இறுதி நாளாகும்.

LEAVE A REPLY