SHARE

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிவடைந்தது.2ஆவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சில் வெற்றியீட்டிய இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்சில் 338 ஓட்டங்களை பெற்றது.இதில் தினேஷ் சந்திமால் 138 ஓட்டங்களை பெற்றார்.அதனை தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 467 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.ஷகீப் அல் ஹசன் அதிபட்சமாக 116 ஓட்டங்களை பெற்றார்.அதன்பின்னர் தனது 2ஆவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 319 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.191 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் நுழைந்த பங்களாதேஷ் அணி 6 விக்கட்டுக்களை இழந்து 4 விக்கட்டுக்களினால் வெற்றியிலக்கை எட்டியது.தமீம் இக்பால் 82 ஓட்டங்களை பெற்றார்.தன்னுடைய 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பங்களாதேஷ் இலங்கை அணிக்கெதிராக டெஸ்ட் பேட்டியொன்றில் பெற்ற முதல் வெற்றி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.இரு அணிகளுக்கும் இடையிலான டெஸட் தொடர் 1-1 எனும் அடிப்படையில் சமநிலையில் முடிவுக்கு வந்துள்ளது.

LEAVE A REPLY