SHARE

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட்போட்டி தொடரின் மூன்றாவது போட்டி ராஞ்சியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.நாணய சுழற்சியில் வென்று முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 451 ஓட்டங்களை  பெற்றது.அணித்தலைவர் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 178 ஓட்டங்களை பெற்றார்.ஜடேஜா 5 விக்கட்டுக்களை பந்து வீச்சில் கைப்பற்றினார்.தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்னர் வரை 7 விக்கட்டுக்களை இழந்து 536 ஓட்டங்களை பெற்று தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வருகிறது.புஜாரா   தன்னுடைய டெஸ்ட் அரங்கில் 3ஆவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்த நிலையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 202 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.இன்று போட்டியின் 4ஆவது நாளாகும்.

LEAVE A REPLY