SHARE

Update : இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் நடைபெற்ற  20-20 போட்டி தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி  வெற்றி

வுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20-20 போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. மெல்பேனில் பகிலரவு போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு அதன் தொடக்க வீரரான ஆரோன் பிஞ், கிளிஞ்சர் ஆகியோர் பெற்றுக் கொடுத்த சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர். அவர்களில் பிஞ் 43 ஓட்டங்களையும் கிலிஞ்சர் 38 ஓட்டங்களையும் தமது அணிக்கு பெற்றுக் கொடுத்தனர். எட் 31 ஓட்டங்களை பெற்றார். இறுதியில் அவுஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது. நீண்ட இடைவெளியின் பின்னர் அணியில் இடம்பெற்ற லசித் மாலிங்க 2 விக்கட்டுக்களையும் பண்டார , சந்தகன், குணரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.

169 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனும் இலக்குடன் கலமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரரான உபுல்தரங்க ஓட்டம் எதுவும் பொறமல் கமின்சின் பந்துவீச்சில் பெயினிடம் பிடிகொடுத்து பூஞ்சியத்தில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான திக்வெல்ல நிதானமாக ஆடி 30 ஓட்டங்களை பெற்ற நிலையில் சம்பாவின் பந்து வீச்சில் கிளிஞ்சரிடம் பிடிகொடுத்து களத்தை விட்டு அகன்றார். இதனை தொடர்ந்து கலமிறங்கிய முனவீர மற்றும் குணரத்ன இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முனவீர 29 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்களை பெற்ற நிலையில் சம்பாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து 52 ஓட்டங்களில் டேர்னரின் பந்தில் குணரத்ன ஆட்டமிழந்தார். இவர் 7 பவுண்டரிகளை விளாசினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய சிறிவர்தன 15 ஓட்டங்களை பெற்ற நிலையில் எல்.பி.டப்ள்யு. முறையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் இலங்கை அணி 20 ஓட்டங்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 172 பெற்று வெற்றியிலக்கை அடைந்தது. கப்புகெதர, பிசன்ன ஆகியோர் முறையே ஆட்டமிழக்காமல் 10 மற்றும் 8 ஓட்டங்களை பெற்றனர். இவ்வெற்றியின் மூலம் 3 போட்டிகளை கொண்ட இத்தொடரில் இலங்கை அணி 1-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.


இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் நடைபெறவுள்ள 20-20 போட்டி தொடரின் முதலாவது போட்டி அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இன்று பிற்பகல் 1.30கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டி தொடரின் நேரடி ஒளிபரப்பு உரிமை ஐரீஎன் ஊடக வலையமைப்பிற்கே கிடைத்துள்ளது. இதற்கமைய இன்று பிற்பகல் 1.30 முதல் ஐரீஎன் ஊடாக இப்போட்டி தொடரை நேரடியாக கண்டுகளிக்கும் சந்தர்ப்பம் இலங்கை இரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

அவுஸ்திரேலிய-இலங்கை அணிகளுக்கு இடையிலான 20-20 போட்டி தொடரின் முதலாவது போட்டியில் களமிறங்குவதற்கு தற்போது இரண்டு அணிகளும் சிறந்த தயார் நிலையில் உள்ளன. இன்றைய போட்டி பாரிய எதிர்பார்ப்புக்களை இலங்கை இரசிகர்கள் வைத்துள்ளதாக இலங்கை அணியின் 20-20 தலைவரல் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY