SHARE

பொலிஸ் நிதிமோசடி பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே பிணை வழங்கப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் 5 கோடியே 31 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த குற்றத்திற்காக பொலிஸ் நிதி மோசடி பிரிவினால் இன்று மஹிந்தானந்த அலுத்கமகே கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக நிதிமோசடி பிரிவிற்கு இன்று முற்பகல் அவர் அழைக்கப்பட்டிருந்தார். நீண்ட விசாரணையின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே 2014 ஆம் ஆண்டு விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகித்த போது இவ்வாறு நிதி மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 14 ஆயிரம் கரம் போட்கள், மற்றும் 11 ஆயிரம் டாம் பலகைகள் கொள்வனவு செய்ததில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றஞ்சுமத்தியிருந்தது. தன்னை கைது செய்வதை தடு:க்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு முன்னாள் அமைச்சரால் மேன் முறையீ’ட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இவ்வுத்தரவை எதிர்த்து அழுத்கமகே உச்ச நீதிமன்றத்தில் மேன் முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இன்று முற்பகல் கைது செய்யப்பட்ட மஹிந்தானந்த அலுத்கமகே கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து 35 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் 5 இல்ட்சம் ரூபா 2 சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார்.

 

LEAVE A REPLY