SHARE

போலி ஆவணங்களை தயாரித்தமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விடுதலையான திஸ்ஸ அத்தனாயக்கவின் வழக்கு இன்று மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.முறைப்பாட்டில் முதலாம் இரண்டாம் சாட்சியாளர்களாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.இதன்படி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ ஆகியோருக்கு நீதிமன்றத்துக்கு வருமாறு அழைப்பாணை விடுத்துள்ளதுடன் இவ்வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.இதற்கு முன்னரும் மேல் நீதிமன்றம் ஜனாதிபதி பிரதமருக்கு அழைப்பாணை விடுத்த போதும் அவர்கள் பணிகள் நிமித்தம் வருகை தந்திருக்கவில்லை என்பதும் குறிப்படத்தக்கது.

LEAVE A REPLY