SHARE

காலி கோட்டைக்கு அருகிலுள்ள கடலில் கண்டு பிடிக்கப்பட்ட சிலை தொடர்பாக புதைபொருள் ஆராய்ச்சி திணைக்களம், ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

காலி கோட்டை கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலரால் குறித்த சிலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சிலை கடற்கரையிலிருந்து 150 அடி நீள தொலைவிலும் 10 அடி ஆழத்திலும் இருந்ததாக தெரிய வந்துள்ளது. குறித்த சிலை இரண்டரை அடி உயரமானதாகும். சுற்றுலா பொலிஸாருக்கு இது தொடர்பாக அறிவித்ததை தொடர்ந்து குறித்த சிலை கரைக்கு எடுத்து வரப்பட்டு கோட்டை சுதர்மாலய விகாராதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குறித்த தேரர் சிலை பற்றிய விபரங்களை புதை பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திற்கு அறிவித்தார். அவர்கள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY