SHARE

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரிவல்வோர் ரகத்தை சேர்ந்த துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் ஹிக்கடுவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி போதை பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் பண்டாரவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே குறித்த நபர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 3.450 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது. இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வெஹரகொடயிலுள்ள அவரது மனைவியின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த ரியல்வோரும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டது. சந்தேக நபர் காலி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதுடன் ஹிக்கடுவ பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை பேலியகொட பட்டிய சந்தியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, 15.100 மில்லியன் கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே இவர் கைது செய்யப்பட்டார். குறித்த யுவதி பட்டிய சந்தியை வசிப்பிடமாக கொண்டவர் என தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY