SHARE

இம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டு வைபவத்தின் போது வன்முறைகளினால் ஏற்பட்ட விபத்துக்களின் தொகை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 100 வீதம் அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்களினால் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரின் தொகை 20 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வைத்தியர் குமார விக்கிரமசிங்க
கடந்த இரு நாட்களில் தேசிய வைத்தியசாலைக்கு 379 பேர் சிகிச்சைக்காக வருகை தந்தனர். இவர்களில் 170 பேர் மேலதிக சிகிச்சைச்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது கணிசமன அதிகரிப்பை காட்டுகின்றது. வீதி விபத்துக்கள் இவ்வருடம் நூற்றுக்கு 20 வீதத்தினால் அதிகரித்துள்ளது. 121 பேர் தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் வீடுகளில் ஏற்படும் விபத்துக்கள் குறைந்துள்ளன. இதேவேளை தடுக்கி விழுந்ததினால் ஏற்படும் விபத்துக்களின் தொகை 30 வீதத்தினால் அதிகரித்துள்ளது. 112 பேர் தேசிய வைத்தியசாலையில் விபத்து பிரிவில் இதனால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வன்முறைகள் சம்பவங்கள் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது நூறுவீதத்தால் அதிகரித்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட 56 பேர் எமது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று முற்பகல் 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்தில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 140 சாரதிகளும் கவனயீனமாகவும் விபத்துக்கள் ஏற்படும் வகையில் வாகனம் செலுத்திய 20 சாரதிகளும் கடும் வேகத்தில் வாகனம் ஓட்டிய 166 சாரதிகளும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY