SHARE

திருக்கோவில் பிரதேச மயானத்திற்கு முன்பாக இன்று காலை சடலம் ஒன்று கரை சேர்ந்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.கரைசேர்ந்துள்ள சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதுடன் இளைஞர் ஒருவரின் சடலமாக இருக்கலாமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.அண்மையில் சாய்ந்தமருது கடலில் நீராடச்சென்ற மாணவர்களில் ஒருவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இளைஞர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்தவர் 17 வயதுடைய சஹாப்தீன் மொஹமட் அப்ரின் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY