SHARE

2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்றும் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இன்றும் பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் ஆரம்பமானது. வரவு செலவு திட்ட 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் இன்று 4 வது தினமாக இடம்பெறுகின்றது. இன்று அமைச்சர் வஜிர அபேவர்தன பாராளுமன்றததில் உரையாற்றினார். திறந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஒரு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டங்களினால் பெற்றுக் கொள்ள முடியாத வெற்றியை இவ்வரவு செலவு திட்டத்தினால் பெற்றுக் கொள்ள முடியுமென அவர்n தரிவித்தார். ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளும் 10 இலட்சம் தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதும் எதிர்கால சந்ததியினரை கடனிலிருந்து மீட்டெடுத்து நல்லிணக்கத்தை உருவாக்குவதும் அவ்வரவு செலவு திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்தார். இது நாட்டினுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்ற வரவு செலவு திட்டமாக இருப்பதோடு வட கிழக்கிற்கு அதிகளவான நிதியொதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் தெரிவித்தார். எதிர்காலம் தொடர்பிலான கனவுகள் அற்ற யதார்த்தபூர்வமான ஒரு வரவு செலவு திட்டமாக இவ்வரவு செலவு திட்டம் அமைந்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன வரவு செலவு திட்ட விவாதத்தில் கருத்து தெரிவித்தார். பொருளாதார ரீதியாக நாடு நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் கொள்கை ரீதியாக பலநடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY