SHARE

ரயில் போக்குவரத்துக்காக பருவகாலச் சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் அதைப் பயன்படுத்தி அரச போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தலாம் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால், பொதுப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அதை இலகுபடுத்துவதற்காக மேலதிக பேருந்துகளை இயக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அரச பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகளின் விடுமுறைகள் யாவும் இரத்துச் செய்யப்பட்டும் உள்ளன.

LEAVE A REPLY