SHARE

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பின்லாந்துக்கான விஜயம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இவ்விஜயத்தினால இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேலும் வலுவடைந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். உலகின் மிகச்சிறந்த கல்வி திட்டம் அமுல்படுத்தப்படும் பின்லாந்துககான விஜயத்தின் மூலம் இலங்கை கல்வி துறையிலும் பல்வேறு நன்மைகளைபெற்றுக் கொள்ள கூடிய வாய்ப்பு ஏற்பட்டதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு உரையாற்றுகையில் ;

“இலங்கைக்கும் பின்லாந்துக்கும் இடையில் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தத்தில் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் தொழிற்கல்வியை அபிவிருத்தி செய்லது தொடர்பான விடயங்களும் இவ் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. உலகில் மிகச்சிறந்த கல்வி திட்டம் பின்லாந்து நாட்டிலேயே அமுல்படுதத்ப்படுகின்றது. இது தொடர்பாக நாங்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டோம். அதன் மூலம் பாரிய புரிந்துணர்வை எம்மால் பெற்றுக் கொள்ள முடிந்தது. பின்லாந்தின் கல்வி திட்டத்தில் அமுல்படுத்தப்படும் விடயங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் கல்வி துறையில் பல்வேறு மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியுமென நாங்கள் கருதுகின்றோம்.” என தெரிவித்தார்

LEAVE A REPLY