SHARE

ரயில்வே ஊழியர்களின் இப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர நிமல் சிறிபாலடி சில்வா இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

“இப்போராட்டம் எந்த விதத்திலும் நியாயமான போராட்டமல்ல. இலங்கை பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தொழிற்சங்க போராட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள போவதில்லை. தொழிற்சங்க உரிமைகளை பெற்றுக் கொள்வது ஒரு தனியான விடயமாகும். ஆனால் இவ்வாறு செயல்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. என்னிடம் பேச்சுவார்த்தைக்கு அனுமதி கோரியுள்ளனர். தற்போதைய பேச்சுவார்த்தை முடிவடைந்தவுடன் நான் அவர்களிடம் பேசுவேன். ஆனால் எனது நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது. அவர்கள் கடமைக்கு திரும்பாவிட்டால் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவித்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் தயங்க போவதில்லை.”

LEAVE A REPLY