SHARE

2017 ஆம்ஆண்டுக்கான இலங்கை விமானப்படையின் மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளன. இலங்கை விமானப்படையினால் வருடாந்தம் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்படுகின்றது. தேசிய பிராந்திய மற்றும் பூகோல ரீதியில் விமானப்படை எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பாதுகாப்பு அச்சுறுதத்ல, இயற்கை பாதிப்புக்கள் தொடர்பில் விமானப்படையை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பில் இம்மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது. உயர் இராணுவ அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றனர். இம்மாநாடு தொடர்பில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

“இம்மாநாட்டின் இறுதியில் நாங்கள் பெற்றுக் கொள்ளும் அனுபவங்கள், ஏனைய நாட்டு படைகளின் அனுபவங்கள், அந்நாடுகளின் தொழில்நுட்பம் மற்றும் புலனாய்வு தகவல்களை எமக்கிடையில் பகிர்ந்து கொண்டு அந்நாடுகளுடன் ஒத்துழைத்து செயல்படுவதே இம்மாநாட்டின் நோக்கம்.”

LEAVE A REPLY