SHARE

புங்குடுதீவு மாணவி வித்யாவின் கொலை வழக்கின்ற பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றம் கடும் நிபந்தணைகளுடன் பிணை வழங்கியது.

இவ்வழக்கு இன்று யாழ் ஊர்காவற்றுறை நீதவான் நிதிமன்றத்தில் நீதவான் எம்.எம்.ரியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபரான லலித் ஜயசிங்கவிற்கு மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இவருக்கு பிணை வழங்க கோரி அவரது சட்டதரணிகள் வாதிட்டனர். இதற்கு அரச தரப்பு சட்டவாதி நிசாந்தன் தனது ஆட்சேபனையை தெரிவித்தார். இவ்வாட்சேபனையில் திருப்தியடைந்த நீதிமன்றம் சந்தேகநபரை 3 இலட்சம் ரூபா காசு மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 4 சரீர பிணையிலும் செல்ல உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு நடைபெறும் போது சந்தேநபர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். சந்தேகநபர் ஒவ்வொரு மாதமும் முதலாவது திங்கள் கிழமைகளில் கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்து தமது கையொப்பத்தை இடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்தும் வழக்கு டிசம்பர் ஐந்தாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY