SHARE

இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை அனைத்து மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் சில இன்று நண்பகல் 12 மணி முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட போவதாக மின்சார சபையின் முகாமைத்துவத்துவத்திற்கு அறிவித்துள்ளனர். மக்களுக்கு தொடர்ந்தும் மின்சாரத்தை வழங்குவது மின்சார சபையின் தேசிய கடமை என்பதால் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. ஆனால் அத்தியாவசிய மற்றும் தடுக்க முடியாத சந்தர்ப்பங்களில் குறித்த நிலை அல்லது பிரிவின் நிறைவேற்று அதிகாரியின் அனுமதியுடன் விடுமுறையை பெற்று கொள்ளலாம் என இலங்கை மின்சார சபை அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY