SHARE

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலைவேளைகளிலும் மழை பெய்யும்.

சில பிரதேசங்களில் குறிப்பாக வடமத்திய மாகாணம் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் மணிக்கு சுமார் 50 மில்லிமீற்றர் கனமழை பெய்யக்கூடும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு , காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாலான கடற்பிரதேசத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய கடற்கரையோர பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை மதியம் அல்லது இரவுவேளைகளில் பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். பொதுமக்கள் மின்னலினால் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

LEAVE A REPLY