SHARE

பலாங்கொடை பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில்  அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். குறித்த நபரை பலத்த காயங்களுடன் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் 30 வயதுடைய பலாங்கொடையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது  பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY