SHARE

மக்கள் குடிநீருக்காக அல்லல்ப்படும் நிலை இன்றும் தொடர்கின்றது. இந்நிலையில் ஹட்டன் டிக்கோயா பகுதியில் இடம்பெறும் குடிநீர் வீண்விரயம் குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

ஹட்டன்-டிக்கோயா பகுதியில் கடந்த ஒருவாரக்காலமாக குடிநீர் குழாய் சேதமடைந்து குடிநீர் வீண்விரயமாகி வருவதை இதுவரை எந்தவொரு அதிகாரியினதும் கண்களில் படாமை கவலைக்குரியவிடயம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஹட்டன்-டிக்கோயா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு குடிநீரை வழங்கும் என்பீல்ட் ஆற்றினை மறைத்து தரவளை பகுதியின் ஊடாக நீரை விநியோகிக்கும் பிரதான குழாய் உடைப்பெடுத்து கடந்த ஒருவார காலமாக குடிநீர் வீண்விரயமாகி வருவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஹட்டன் டிக்கோயா பிரதேச சபை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு காரணமாக நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் ஒருசில மணித்தியாலங்களுக்கு மாத்திரமே நீர்வழங்கப்பட்டு வரும் நிலையில் குடிநீரை இவ்வாறு விரயம் செய்வது நியாயமானதா என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நீர் கசிவினால் நீர்வீண்விரயமாவதுடன், வீதிகள் சேதமடைந்து பயணிக்க முடியாத நிலை உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY