SHARE

2009ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பாக முதலில் விசாரணைகளை ஆரம்பித்தவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ என தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் விஜய அமரசிங்கவிடம் விசாரணைகளை நடத்த பொறுப்பளிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேக்கர தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொழும்பில் இளைஞர்களை கடத்திச்செல்வது தொடர்பான முறைப்பாடு கிடைக்கும் போது அது தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான விஜயஅமரசி ங்க விசாரணைகளை நடத்தினார். இது தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷவுடன் குறித்த விசாரணைகள் தொடர்பாக தான் பேச்சுவார்தை நடத்தியதாக விஜயஅமரசிங்க குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையொன்றை பெற்று தருமாறு தனக்கு அறிவித்ததாகவும் விஜயஅமரசிங்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். கொழும்பில் கடத்தப்பட்ட 11 இளைஞர்களுள் மூவரை விடுவிப்பதற்காக அப்போதைய கடற்றொழில் நீரியல்வள அமைச்சராகவிருந்த பீலிக்ஸ் பெரேரா, எட்மிரல் வசந்த கரணாககொடவிற்கு அனுப்பிய கடிதம் ஒன்றும் சாட்சியங்களாக கிடைத்துள்ளன. ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஷ்வநாதன், திலக்கேஸ்வரன் ராமலிங்கம் ஆகிய மூவரையும் தான் அறிவதாகவும் அக்கடிதத்தில் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். இவ்விளைஞர்கள் கடற்படையினரின் பொறுப்பில் இருப்பதாக பீலிக்ஸ் பெரேராவுக்கும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு கருத்து வெளியிட்ட ஊடகப்பேச்சாளார்,

இறுதியாக கைதுசெய்யப்பட்ட கொமதோரு தசநாயக்கவின் பொறுப்பில் இந்த இரண்டு பிரிவுகளும் உள்ளன. இவர்களின் பெற்றோர்கள் கொமதோரு தசநாயக்கவை சந்தித்தமைக்கு சாட்சிகள் உண்டு. கடற்படையினரின் செயற்பாடாக இது அமையவில்லை. அதிலிருந்த ஒருசிலரே இதில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இருந்த அதிகாரத்தை கொண்டு அவர்களின் சுயவிருப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு செயலாகவே இதனை கருத முடியும். பணத்திற்காக இவ்வாறு செயற்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது

LEAVE A REPLY