SHARE

சட்டவிரோத மண் ஏற்றிச்சென்ற டிப்பர் மற்றும் உழவு இயந்திரங்களுடன் மூவர் கைது.மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றச்சென்ற இரண்டு உழவு இயந்திரங்கள் ஒரு டிப்பர் வாகனத்துடன் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பீ.வெதகெதர தெரிவித்தார்.அண்மைக்காலமாக சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளன.கைதான இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.நேற்று மாலை காத்தான்குடி பிரதான வீதியில் வைத்தே பொலிசார் இவர்களை கைது செய்துள்ளனர்.கடந்த வாரமும் இவ்வாறு சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்ட மூன்று வாகனங்களையும் மூன்று சந்தேக நபர்களையும் பொலிசார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY