SHARE

தற்போது முழு நாட்டின் அவதானத்தை ஈர்த்துள்ள குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய இயந்திரம் ஒன்றை உற்பத்தி செய்ய கம்பளை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு முடிந்துள்ளது. கம்பளை தொலுவ பிரதேசத்தில் வசிக்கும், விக்கும் சம்பத் திம்புல்கஸ்தென்ன என்ற 37 வயதுடைய இவர் இயந்திரம் திருத்துபவர் ஆவார். நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை எவ்வித பிரச்சினைகளும் இன்றி மீள்சுழற்சி செய்வதற்கு இந்த புதிய இயந்திரத்தின் மூலம் முடிந்துள்ளது.

இரும்பு, பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் கடதாசி போன்றவைகள் இவ் இயந்திரத்தின் ஊடாக வேறுபடுத்தி மீள் சுழற்சி செய்யப்படுகின்றது. இதன் பகுதிகள் உர உற்பத்திகள் மற்றும் மூலப்பொருள் உற்பத்திகளும் பயன்படுத்தப்படுகின்றது. குப்பை மீள் சுழற்சி இயறந்திர உற்பத்திக்காக 37 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். அதன் ஏனைய உதிரிபாகங்களுக்காக மேலும் 20 இலட்சம் ரூபா செலவாகுமெனவும் தெரிவித்தார். கொழும்பு குப்பை பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை 3 மாத காலத்திற்குள் தீர்த்து வைக்க முடியுமென கூறும் அவர் தன்னுடைய இயந்திரத்தை பயன்படுத்தி குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண அரசின் ஒத்துழைப்பை நாடியுள்ளார்.

LEAVE A REPLY