SHARE
ஹட்டன்  டிக்கோயா கிளங்டன் மாவட்ட வைத்தியசாலை எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி  திறந்து வைக்கப்படவுள்ளது. இதுதொடர்பான நிகழ்வில் இந்தியப்பிரதமர்  நரேந்திர மோதி கலந்துகொள்ளவுள்ளார்.
நோர்வூட் பொது மைதானத்தில் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்திலும் இந்தியப்பிரதமர்  எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாரத பிரதமர் நரேந்திரமோடியை வரவேற்பது தொடர்பான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கான கலந்துரையாடல் கூட்டமொன்று   நோர்வூட் பொது மைதான கேட்போர் கூட்டத்தில் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்டச் செயலாளர் திருமதி  எம். கே. மீகஸ்முல்ல உட்பட மத்திய மாகாணசபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஐக்கிய நாடுகள் வெசாக் வைபவம் எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கையில்ஆரம்பமாகவுள்ளது இதில் பங்குபற்ற இந்தியப்பிரதமர் நரேந்திர மோதி இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY