SHARE

அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மீனவர்கள் விடயத்தில் இலங்கை கடற்படைக்கு எவ்வித தொடர்பும் இல்லையென்றும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை இந்திய அரசு தாமதப்படுத்துவது சந்தேகத்தை ஏற்படது;துவதாகவும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களால் கொண்டுவரப்பட்ட இழுவை மடித்தொழில் சட்டம் தற்போது அங்கீகரிக்கப்படவுள்ள நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் அந்த சட்டத்தை எதிர்ப்பதாக கூறி வருவது நகைப்பிற்குரிதென்றும் தனது வாக்கு வங்கியை தக்கவைக்க சட்டவிNhதத்திற்கு அவர் ஆதரவளழப்பதாகவும் வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எல்லை தாண்டும் மீனவர் விடயத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் அவரை இவ்வமைச்சிலிருந்து மாற்றுவது பற்றி ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்து எல்லை தாண்டும் மீனவர் விடயம் முற்றும் பெறும் வரை அவரை அமைச்சராக தொடர ஒத்துழைக்க வேண்டுமெவும் குறறித்த சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

LEAVE A REPLY