SHARE

சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதூங்கவின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிக்கும் நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முக்கியமான ஒரு விடயத்தினை கல்கிசை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.அதாவது சிறப்பு ஆயுதமொன்றால் தலையில் தாக்குதல் நடாத்தி மூளையின் ஒரு பகுதி வெளியே எடுக்கபட்டு இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.லசந்தவின் கொலை இடம்பெற்ற காலப்பகுதியில் பொழும்பில் இராணுவ மேஜர் ஜெனரலாக இருந்தவரிடமும் அமைச்சர் பீல்ட மார்ஸல் சரத் பொன்சேகாவிடமும் வாக்கு மூலம் பெற்றதன் பின்னரே குற்றப்புலனாய்வு திணைக்களம் கல்கிசை நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

LEAVE A REPLY