SHARE

பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் விடுதியின் நினைவு படிகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பாக உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் நான்கு மாடி விடுதி திறந்து வைக்கப்படவிருந்த நிலையில் இனந்தெரியாதோர் அதன் நினைவு படிகத்தை சேதமாக்கியுள்ளனர். 400 மாணவர்களுக்கு விடுதி வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் 100 அறைகளை கொண்ட இந்த கட்டடத்திற்கு மறைந்த அமைச்சர் லலித் எத்துலத் முதலியின் பெயர் சூடப்பட்டது. அவர் பல்கலை மாணவர்களுக்கு ஆற்றிய சேவையை நினைவுகூறும் வகையிலேயே இப்பெயர் சூடப்பட்டது. நிதியமைச்சின் செயலாளர் தலைமையில் இவ்விடுதி திறந்து வைக்கவிருந்த போதிலும் மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்வெதிர்ப்பிற்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நாசகார செயல் குறித்து பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகள் நடத்தப்படும் என உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY