SHARE

உடுவே தம்மாலோக தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பதில் மஜிஸ்திரேட் திருமதி துலானி அமரசிங்க பிடிவிறாந்து பிறப்பித்துள்ளார். தொடர்ந்து 2 தடவை நீதிமன்றத்தில் ஆஜராக தவறினார் என்பதே தேரருக்கு எதிரான குற்றச்சாட்டாகும். உடுவே  தம்மாலோக தேரர் தங்கியிருக்கும் பொல்ஹேன்கொட எலன்மெத்தினியாராம விகாரையிலுள்ள ஒலிபெருக்கிகள் அயலிலுள்ள மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் பயன்படுத்தப்படுவதாக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஆஜராகுமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடுவே தம்மாலோக தேரர் தெர்டர்ந்தும் புறக்கணித்து வந்துள்ளார். குறித்த வழக்கு எதிர்வரும் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

LEAVE A REPLY