SHARE

காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்காக நீர் ஊற்றுக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவிதான தெரிவித்தார். எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற வைபவம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

நாம் அனைவரும் எமது நீர் ஊற்றுக்களை பாதுகாக்க வேண்டும். இவ்வருட ஒக்டோபர் மாதம் இரத்தினபுரியிலுள்ள எமது அமைச்சு அலுவலகத்தின் ஊடாக நீர் ஊற்றுப்பகுதிகளை பாதுகாக்க மரக்கன்றுகளை நடுவதற்கு தீர்மானித்துள்ளோம். ஓரிரண்டு நீர் ஊற்றுக்களை பாதுகாப்பதன் மூலம் புதிதாக நீர் ஊற்றுக்கள் ஏற்படும். இதனால் வேர்கள் நீரை உறிஞ்சிக் கொள்ளும். ஆகவே நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் இச்செயலை செய்யும் போது எமது பகுதி நீரில் தன்னிறைவு அடைந்த பகுதியாக காணப்படும் என தெரிவித்தார்.

நீர் வளத்தை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் எம்பிலிப்பிட்டிய கல்வி வலய மட்டத்தில் இடம்பெற்ற ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் பிரதி அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. சர்வதேச நீர் தினத்தையொட்டி இவ்வைபவம் இடம்பெற்றது.

LEAVE A REPLY