SHARE

ஒரு சிகரட்டை மட்டும் விற்பனை செய்வதை தடை செய்யும் அமைச்சரவை பத்திரம் இன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சுகாதார துறை தொடர்பில் அரசாங்கம் கடந்த 2 வருடங்களில் மேற்கொண்ட தீர்மானம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பாராட்டை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மல்வானை பகுதியில் இடம்பெற்ற நடமாடும் மருத்துவ முகாமில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நாடெங்கும் நடமாடும் சுகாதார சேவைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணைவாக மல்வானையில் சுவஉதான நடமாடும் சேவை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையில் பற்சிகிச்சை கூடமும் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது, ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் சத்துரசேனாரத்ன உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY