SHARE

சர்வாதிகாரம் படைத்த நிலையிலும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற மு:டியாதோர் தற்போது ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பது நகைப்புக்குரியதென வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன தெரிவித்தார். மெதிரிகிரிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மகளிர் அணிக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இப்பகுதியிலுள்ள மாகாண சபை உறுப்பினர், எதிர்கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர், போன்றோருக்கு ஆட்சியை கவிழ்க்க முடியுமா? அவர்களால் கட்சியை உடைக்க முடியுமா? தாமரை மொட்டோ அல்லது வேறு எந்த சின்னத்திலாவது போட்டியிட்டு அவர்களால் கரைசேர முடியுமா? அது முடியாது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாதவர்கள் தற்போது எதிர்கட்சியில் இருந்து கொண்டு வேறு கட்சியின் மூலம் ஆட்சியை பிடிக்க முடியுமா முடியாதல்லவா என கூறினார்.

மெதிரிகிரிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மகளிர் அணி கூட்டம் வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன தலைமையில் மெதிரிகிரிய தேசிய பாடசாலையில் நடைபெற்றது. மெதிரிகிரிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் சம்பத் -ஸ்ரீ நிலந்த இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மகளிர் சம்மேளன செயலாளர் சந்திரிக சொய்ஸா உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY