SHARE

திருமலை மாவட்டத்தில் இம்முறை நடைபெறும் யொவுன்புற நிகழ்ச்சியையொட்டி விசேட திட்டங்களை அமுல்படுத்த சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.இதனை முன்னிட்டு விசேட கலந்துரையாடல் ஒன்று பிரதி அமைச்சர் பைசல் காசிம் தலைமையில் திருமலை சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் யொவுன்புறவில் கலந்துகொள்ளும் உள்நாட்டு வெளிநாட்டு இளைஞர் யுவதிகளின் சுகாதாரத்தை பேணுவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. டாக்டர்கள், பொது சுகாதார அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புடன் சுகாதார நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம், உணவு விநியோகம், டெங்கு நோயை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. இக்கலந்துரையாடலில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY