SHARE

தாயகத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியோரை பாராட்டும் தேசிய விருது வழங்கும் விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின்னர் இம்முறை விருது வழங்கல் விழா நடைபெறவுள்ளது.தாயகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட 90 பேருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இங்கு வழங்கப்படும் அதியுயர் விருது ஸ்ரீ லங்கா அபிமாணியாகும். தாமரை மலர் இலட்சினை அடங்கிய தங்க பதக்கத்தை அடையாளமாக கொண்ட இவ்விருது தேசத்திற்காக ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் அதியுயர் புகழுடன் கூடிய சேவைக்காக ஒருவருக்கு மாத்திரம் வழங்கப்படும். அத்துடன் பத்து தேஷமான்ய விருதுகளும், ஒன்பது தேபந்து விருதுகளும் ஸ்ரீ லங்கா ரஞ்சன உள்ளிட்ட ஏனைய விருதுகளும் வழங்கப்படவுள்ளன. ஸ்ரீ லங்கா ரஞ்சன தேசிய விருது இலங்கையர்கள் அல்லாதவர்களுக்கு உலக மக்களுக்காக ஆற்றிய விசேட பணியை பாராட்டி வழங்கப்படும்.

LEAVE A REPLY