SHARE

இந்து சமுத்திரத்தில் அமைதியானதும் சுதந்திரமானதுமான கடல்வழி போக்குவரத்தை உறுதி செய்தவற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான மாநாடு ஒன்றை கூட்டுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். சகல தரப்பினர்களையும் உள்ளடக்கியவாறு மாநாடு ஒன்றை இவ்வாறு கூட்டுவதற்கு தலைமை தாங்குதவற்கு இலங்கை தயார் என பிரதமர் அவுஸ்திரேலியாவில் வைத்து வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகத்தின் சட்டபீட விசேட அழைப்பாளர்களின் இராபோசன விருந்தில் பிரதான சொற்பொழிவாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்து சமுத்திரதத்திற்குள் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு சிறந்த வழி அங்கு பயணிக்கும் இராணுவ வள்ளங்களுக்கு என பண்பாட்டு விழுமிய தொகுதியொன்றை உருவாக்குவதே என பிரதமர் வலியுறுத்தினார். கடல்மார்க்க பயங்கரவாதம் குறித்தும் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY