SHARE

காணி நிரப்புவதை தடுப்பது குறித்து தமது பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாத சகல அதிகாரிகளும் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வறட்சியுடனான காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதாந்தம் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இது குறித்து தெரிவித்துள்ளார். வறட்சி காரணமாக விவசாயத்துறை எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தல்கள் குறித்து, குறித்த துறைசார்ந்த அதிகாரிகளுடன் இப்பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. காணி நிரப்புதல் குறித்து பல முறைபாடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் காலங்களில் அரிசி நிவாரணமாக வழங்கப்படவுள்ளது. உரிய புள்ளிவிபரங்கள் குறித்து கனவம் செலுத்தி முறையாக அதனை விநியோகிக் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளை கேட்டுள்ளார். நீர் பற்றாக்குறை காணப்படுகின்ற பிரதேச மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற நீர் பயன்பாட்டிற்கு பொருத்தமான நிலையில் உள்ளதா என கண்டறிவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது வலியுறுத்தினார். எதிர்காலத்தில் ஏற்படலாம் என சந்தேகிக்கப்படுகின்ற மின்சார நெருக்கடி குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களை அறிவுறுதடதுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். அமைச்சர்கள் பலரும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY