SHARE

பழுதடைந்த ஒருதொகை அரிசி நிறமூட்டி விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போது கைப்பற்றப்பட்டுள்ளது. பொலன்னறுவை கல்லேல பகுதியில் இரண்டு அரிசி ஆலைகளிலிருந்து இந்த அரிசி கைப்பற்றப்பட்டதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

2400 கிலோ கிராம் அரிசி இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. சிவப்பு நாடு அரிசியாக இவற்றை விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலன்னறுவை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. பொது மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டிற்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. பழுதடைந்த அரிசி கைப்பற்றப்பட்டதுடன், குறித்த இரண்டு நெல் ஆலைகளும் சீல் வைக்கப்பட்டன. குறித்த அரிசி கல்லேல பகுதியில் குப்பைகூளங்களை அகற்றும் பகுதியில் வைத்து எரிக்கப்பட்டது. அரிசி பாவணையின் போது பொதுமக்கள் சகல சந்தர்ப்பங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டுமென நுகர்வோர் அதிகார சபை தெரிவிக்கின்றது. விசேடமாக சிவப்பு நாடு ரக அரிசிக்கு வர்ணக்கலவையிடும் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அவற்றை விற்பனை செய்யும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென்றும் நுகர்வோர் அதிகார சபை வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு குற்றமிளைப்போருக்கு எதிராக சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டுமென பொது மக்கள் கேட்டுள்ளனர்.

LEAVE A REPLY