SHARE

மட்டக்களப்பு ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 06பேரையும் தொடர்ந்தும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி  உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வருடம் செப்டம்பர் 11ஆம் திகதி தாயும் மகளும் ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

LEAVE A REPLY