SHARE

லண்டனில் இடம்பெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இங்கிலாந்து பயணமானார். இன்று ஆரம்பமாகும் இம் மாநாடு எதிர்வரும் 21 ம் திகதி வரை நடைபெறும்.
2018 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நாளை லண்டனில் ஆரம்பமாகவுள்ளதுடன் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன. பொதுவான எதிர்காலத்தை நோக்கி என்பதே இம்முறை இம்மாநாட்டின் தொனிப்பொருளாகும். இம் மாநாட்டில் சௌபாக்கியம், பாதுகாப்பு, நீதி உள்ளிட்ட விடயங்களை அடைவதற்காக இம்மாநாட்டில் அவதானம் செலுத்தப்படவுள்ளது. இறுதியாக மோல்டாவில் பொதுநலவாய மாநாடு இடம்பெற்றது. இவ் அமைப்பின் தலைமைத்துவத்தை வகிக்கும் மோல்டா இம்முறை நடைபெறும் அமர்வில் தலைமைத்துவத்தை ஐக்கிய இராச்சியத்திடம் ஒப்படைக்கவுள்ளது. ஜனாதிபதி தனது லண்டனுக்கான உத்தியோக விஜயத்தின்போது பிரிட்டிஸ் பிரதமர் தேரேஷா மேவையும் சந்திக்கவுள்ளார். அத்துடன் இம் மாநாட்டில் பங்கு பற்றும் அரச தலைவர்கள் சிலருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் அவர் அங்குநடைபெறும் பொதுநலவாய வர்த்த பேரவையிலும் உரையாற்றவுள்ளார். நிரந்தர அபிவிருத்தி இலக்குகளை அடைவது தொடர்பான மாநாட்டில் பிரதான உரையை நிகழ்த்துவதற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய விளையாட்டு சம்மேளனம். மற்றும் பிரிட்டிஸ் மகாராணியின் 92 வது பிறந்ததினத்தையொட்டி நடைபெறும் விசேட நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் நகரிலுள்ள விகாரைக்கும் சென்று மத வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

LEAVE A REPLY